உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று (19) பிற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழில் உள்ள 9
உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்
இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி
கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்
உள்ளிட்ட சிலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
