Home தொழில்நுட்பம் பேரூந்து விபத்துக்களை தடுக்க அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

பேரூந்து விபத்துக்களை தடுக்க அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

0

 பேரூந்து விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பேரூந்து சாரதிகள் நித்திரை கலக்கத்திற்கு உள்ளாவதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக விசேட கருவிகள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரூந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இந்தக் கருவிகள் மூலம் சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய நித்திரைக் கலக்கம் கண்காணிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் ஏனைய பேரூந்துகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கண்காணிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக அமைச்சர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version