Home இலங்கை அரசியல் இலங்கையில் அடுத்த தேர்தல்! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

இலங்கையில் அடுத்த தேர்தல்! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

0

பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தனியார் உறுப்பினர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது இன்று நாடாளுமன்றத்தில் எதிர் தரப்பு எம்.பிக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் சட்டம்

‘1988 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான மனு’ என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். நிஜாம் காரியப்பர் இந்தப் பிரேரணையை வழிமொழிந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version