Home இலங்கை பொருளாதாரம் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசு கப்பல்

0

ஐடா ஸ்டெல்லா (AID Astella) சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு (Colonbo)  துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பல் இன்று (12) காலை கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவிலிருந்து (Malaysia) 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

இந்த கப்பல் நேற்று (11) இரவு ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மேலும் அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த கப்பலில் வந்ததாக சுட்டிக்காப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் இன்று கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version