சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் விமான அணிவகுப்பை ஏற்பாடு செய்தவர்களும் எதிர்காலத்தில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, “10 ஆண்டுகள் பழமையான விமானத்தை கொழும்பில் மூன்று முறை பறக்க அனுமதித்தவர்களும் நாளை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,” என நாமல் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு
இதேவேளை, தனது குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை மீண்டும் வலியுறுத்திய நாமல், அனைத்து விசாரணைகளுக்கும் தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய எரிபொருள் விலைகள் குறைந்துள்ள நிலையில், சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் கமிஷன்களில் யார் யார் பயனடைகிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியேழுப்பியுள்ளார்.
