3வது இடத்தை பிடித்த அஜித்
நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த கார் ரேஸ் நேற்று மதியம் துவங்கிய நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.
நடிகர் அஜித் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும்.. ஆச்சரியத்தில் வர்ணனையாளர்
இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
கம்பீரமாக பறக்கும் இந்திய கொடி
வெற்றியை கொண்டாடும் விதமாக கையில் இந்திய கொடியை ஏந்தி அனைவரையும் உற்சாகத்துடன் சந்தித்து, வாழ்த்துக்களை பெற்றார் அஜித்.
இந்த நிலையில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அஜித், பதக்கத்தை வாங்க மேடை ஏறும் பொழுதும் இந்திய கொடியுடன் வந்தார் அஜித். வின்னிங் மூவ்மெண்ட் நேரத்தில் மேடையில் இருந்து எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ பாருங்க..
3rd Place in 992 Class 🔥 #AjithKumarRacing pic.twitter.com/bAH0TlKSOG
— Cineulagam (@cineulagam) January 12, 2025