Home சினிமா அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் எப்போது?… உறுதி செய்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள்

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் எப்போது?… உறுதி செய்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள்

0

குட் பேட் அக்லி

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் துணிவு.

அப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டானவர் அப்பட படப்பிடிப்பை முடித்து இப்போது குட்க பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இடையில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டதாக டப்பிங் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகும் இப்பட ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

குட் பேட் அக்லி

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் கமிட்டான படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்து அசத்தலான லுக்கில் நடித்துள்ளார்.

தற்போது என்ன தகவல் என்றால் இப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

ஜனவரிக்கு அஜித் படம் வருகிறது என ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் விடாமுயற்சி என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/ajith-good-bad-ugly-movie-release-date-1732015349

NO COMMENTS

Exit mobile version