Home சினிமா அஜித்துக்கு வழங்கப்பட்ட ஜென்டில்மேன் டிரைவர் விருது.. மகிழ்ச்சியில் ஷாலினி வெளியிட்ட பதிவு

அஜித்துக்கு வழங்கப்பட்ட ஜென்டில்மேன் டிரைவர் விருது.. மகிழ்ச்சியில் ஷாலினி வெளியிட்ட பதிவு

0

அஜித் குமார்

சினிமா – கார் ரேஸ் என இரண்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்றும் சாதனை படைத்தது. மேலும் தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கார் ரேஸிலும் தொடர்ந்து டாப் 3ல் வருகிறார் அஜித்.

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த விஜய்.. ஜனநாயகன் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

ஜென்டில்மேன் டிரைவர் விருது

இந்த நிலையில், நேற்று 2025ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் தனது குடும்பத்துடன் அஜித் கலந்துகொண்டார். மேலும் தனது கணவர் விருது வாங்கியதை தொடர்ந்து, ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், “எனது கணவரின் அருகில் நிற்பதில் பெருமை அடைகிறேன். அவருக்கு 2025 ஆம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது” என பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு..

NO COMMENTS

Exit mobile version