Home சினிமா 42 கிலோ உடல் எடையை குறைத்த அஜித்! எப்படி தெரியுமா? அவரே கூறியுள்ளார்..

42 கிலோ உடல் எடையை குறைத்த அஜித்! எப்படி தெரியுமா? அவரே கூறியுள்ளார்..

0

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்தது. அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் இப்படியா! கவர்ச்சியில் எல்லைமீறும் சீரியல் நடிகை

மேலும் அடுத்த ஆண்டு கோடையில் இப்படம் ரிலீஸாகும் என அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

உடல் எடை

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் எப்படி உடல் எடையை குறைந்தேன் என்பது குறித்து அஜித் பேசியுள்ளார்.

“ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன். இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்”.

“ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன். என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது போது செய்து கொண்டிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். அஜித்தின் இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version