Home சினிமா த்ரிஷாவுடன் அஜித் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படம்.. First லுக் போஸ்டர் இதோ

த்ரிஷாவுடன் அஜித் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட படம்.. First லுக் போஸ்டர் இதோ

0

அஜித் – த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அஜித்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். அஜித் – த்ரிஷா ஜோடி என்பது எவர் க்ரீன் ஜோடியாகும். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதன்பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்து வந்த த்ரிஷா, அதனை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் இணைந்துள்ளார்.

கைவிடப்பட்ட படம்

அஜித் – த்ரிஷா இணைந்து நடித்து பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்திருந்தாலும், இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்து உங்களுக்கு தெரியுமா.

இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜித் – த்ரிஷா இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்த படம் திருடா. இப்படத்திற்கு பூஜை போட்டு, First லுக் போஸ்டர் எல்லாம் கூட வெளிவந்துவிட்டது.

ஆனால், திடீரென படத்தை ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன்பின் இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் தான் ஜனா என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/ajith-trisha-dropped-movie-1731406759

NO COMMENTS

Exit mobile version