Home இலங்கை பொருளாதாரம் ஐ.எம்.எப் உடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து : ஜனாதிபதி அநுர

ஐ.எம்.எப் உடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து : ஜனாதிபதி அநுர

0

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாளை மறுதினம் (23) கைச்சாத்திடப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வின் ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதான கடன் வழங்குநர் 

இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/arrangement-with-imf-to-signed-soon-anura-1732171707

NO COMMENTS

Exit mobile version