Home இலங்கை அரசியல் ஐ.தே.கட்சிக்கு புதிய உப தலைவர் நியமனம்

ஐ.தே.கட்சிக்கு புதிய உப தலைவர் நியமனம்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் 

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க (Navin Dissanayake) கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/64bECvN3KGQ

NO COMMENTS

Exit mobile version