Home உலகம் கொலை வெறியின் உச்சம் – காசாவில் ஐந்து ஊடகவியலாளரை படுகொலை செய்த இஸ்ரேல்

கொலை வெறியின் உச்சம் – காசாவில் ஐந்து ஊடகவியலாளரை படுகொலை செய்த இஸ்ரேல்

0

காசா (Gaza) நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா ஊடகத்தின் நிருபர்கள் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (10.08.2025) மேற்கொள்ளப்பட்ட இந்த “இலக்கு வைக்கப்பட்ட படுகொலை” “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மற்றொரு அப்பட்டமான மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), அனஸ் அல்-ஷெரிப்பை குறிவைத்ததை உறுதிப்படுத்தியது, அவர் “ஹமாஸில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்” என்று ஒரு டெலிகிராம் பதிவில் எழுதியுள்ளது.

பத்திரிகையாளர்

இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவத்திற்கு கத்தாரில் இருந்து செயல்படும் Al Jazeera செய்தி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் மொத்தம் ஏழு பேர் இறந்ததாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் அதன் ஊழியர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய ஒளிபரப்பாளர், ஆனால் சில மணி நேரம் கழித்து அதை ஐந்து பேர் எனத் திருத்தினார்.

அதன் நிர்வாக ஆசிரியர் முகமது மோவாட் பிபிசியிடம், அல்-ஷெரீஃப் ஒரு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் என்றும், காசா பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உலகம் அறிய “ஒரே குரல்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version