Home உலகம் மருதங்கேணி – பருத்தித்துறை வீதி கைவிடப்பட்டுள்ளதா…! மக்கள் விசனம்

மருதங்கேணி – பருத்தித்துறை வீதி கைவிடப்பட்டுள்ளதா…! மக்கள் விசனம்

0

வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் கனமழையால் மருதங்கேணி பருத்தித்துறை
வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் போடப்பட்ட குறித்த
வீதி இன்றுவரை தரமற்ற வீதியாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி புணரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை
மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை
விடுத்தும் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ நோயாளிகள்

மருத்துவ நோயாளிகள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும்
பயணம் செய்யும் குறித்த வீதி பாழடைந்ததாகவே காணப்படுகின்றது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாட்டில் பெய்துவரும் தொடர்மழை வடமராட்சி கிழக்கிலும் பெய்துவருகின்றது.  

இதனால் குறித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதி பயணிக்க முடியாமல்
காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்டகாலமாக பாழடைந்த இந்த பிரதான வீதியை புணர்நிர்மானம்
செய்து தருமாறு மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version