Home இலங்கை குற்றம் விருந்தில் கடும் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

விருந்தில் கடும் மோதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

0

மதுபான விருந்து ஒன்றில் ஈடுபட்ட இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம சிறிகந்துரவத்த பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய திரிமதுர ருவன் நிஷாந்த சொய்சா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

தென்னந்தோப்பு ஒன்றில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்திக்கொண்டிருந்ததாகவும், இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version