Home முக்கியச் செய்திகள் சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: கேள்வியெழுப்பியுள்ள சிறீகாந்தா

சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: கேள்வியெழுப்பியுள்ள சிறீகாந்தா

0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவிற்கு ஆதரவு என தீர்மானித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தலைமையிலான குழு எதனை கூற வருகிறது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா கேள்வியேழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்றையதினம் (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் விடுத்துள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒரு விடயம் தெளிவானது, ஒற்றையாட்சி என்கின்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்ற, வெற்றி வாய்ப்புக்களை கொண்டுள்ள ஒரு வேட்பாளரான சஜித் பிரமதாசவை ஆதரிக்குமாறு எந்த வித தயக்கமும் இன்றி தமிழரசுக் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது எந்த ஒற்றையாட்சியினுடைய இரும்பு பிடியில் இருந்து எமது இனம் விடுபட வேண்டும் என்கிற அரசியல் நிலைபாடு, தமிழ் மக்கள் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் இந்த நிலைப்பாட்டுக்கு முற்று முழுதாக எந்த வித தயக்குமும் உறுத்தலும் இன்றி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு விடயத்தை இங்கு சிந்திக்க வேண்டும், தமிழரசுக் கட்சி, எங்கே போய்கோண்டு இருக்கிறது.தமிழரசுக் கட்சி தடம் புரண்டக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

 

https://www.youtube.com/embed/-BN–_Ji1nY

NO COMMENTS

Exit mobile version