Home இலங்கை அரசியல் சர்வதேச தரப்பினரை சந்தித்த அலி சப்ரி! இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

சர்வதேச தரப்பினரை சந்தித்த அலி சப்ரி! இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

0

ரஷ்யாவுக்கு (RUssia) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry), பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.  

இதன்படி, தாய்லாந்து (Thailand), சீனா (China), பெலாரஸ் (Belarus), கஜகஸ்தான் (kazakhstan), ஈரான் (Iran) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிகார அமைச்சர்களை அலி சப்ரி சந்தித்துள்ளார்.

பிரிக்ஸ் (BRICS) மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட அமர்வில் பங்கேற்ற அலி சப்ரி, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை (Sergey Lavrov) நேற்று சந்தித்திருந்தார்.

பக்க சந்திப்புக்கள்

இந்த நிலையில், குறித்த மாநாட்டின் பக்க சந்திப்பாக பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தான் சந்தித்ததாக, அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகேரி கனிக்கும் (Ali Bagheri Kani) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இரு தரப்பு உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதனை தொடர்ந்து, கஜகஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முராத் நூர்ட்லுவை (Murat Nurtleu) சந்தித்த அலி சப்ரி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு உறவுகள்

கல்வி, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை தொடர்பில் பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி அலினிக் (Sergei Aleinik) உடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியதுடன், இரண்டு நாடுகளிலும் வெளிநாட்டு அலுவலகத்தை உடனடியாக ஸ்தாபிப்பது தொடர்பான பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளார்.

அத்துடன், சீன வெளிவிகார அமைச்சர் வெங் யீவை (Wang Yi) அலி சப்ரி சந்தித்துள்ளதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சாவை (Maris Sangiampongsa) சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் சந்தித்துள்ளார்.

அவரது நியமனத்துக்கு வாழ்த்து தெரிவித்த அலி சப்ரி, தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version