Home சினிமா நயன்தாரா கூட செய்ய முடியாத சாதனை.. கல்யாணியின் Lokahவுக்கு குவியும் பாராட்டு

நயன்தாரா கூட செய்ய முடியாத சாதனை.. கல்யாணியின் Lokahவுக்கு குவியும் பாராட்டு

0

இந்திய சினிமாவில் ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளுக்கு ரெஸ்பான்ஸ் என்பது சுமாராக தான் எப்போதும் இருந்து வருகிறது. மகாநடி, அருந்ததி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் வசலில் ஹீரோ centric படங்களுக்கு நிகராக வந்ததில்லை.

தமிழில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என பல நடிகைகள் இப்படி படங்களில் நடித்து இருந்தாலும், அவர்கள் யாரும் செய்ய முடியாத சாதனையை மலையாளத்தில் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் Lokah படம் செய்து இருக்கிறது.

கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து இருக்கும் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

100 கோடி வசூல்.. குவியும் பாராட்டு

Lokah படம் 101 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர். ஹிந்தி நடிகை ஆலியா பட் படத்தை பாராட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் பலரும் கல்யாணியை பாராட்டி வருகின்றனர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் கூட செய்ய முடியாத சாதனையை அவர் செய்து இருப்பதாக பாராட்டி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version