எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த மாதம் நுகேகொடையில் மாபெரும் பேரணியை நடாத்த முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(11)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் பேரணி
அத்தோடு, எதிர்காலத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்று சேருவதற்கான அடித்தளமாக இந்த பேரணி அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கொண்டு ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தரும் வகையில் செயற்படுபவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
