Home இலங்கை பொருளாதாரம் பயன்படுத்தப்படாத அரச வாகனங்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

பயன்படுத்தப்படாத அரச வாகனங்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

0

ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளவை உட்பட அரசு நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத அனைத்து வாகனங்களும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வாகனங்கள் மார்ச் 31 ஆம் திகதி முன்னர் விற்கப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) இன்று (27)நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அதன் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் திறைசேரியில் வரவு வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

800க்கும் மேற்பட்ட வாகனங்கள்

அத்தோடு, முந்தைய ஆட்சிகளில் இருந்தவர்கள் 800க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர்களுக்கு மாத்திரம் சுமார் 68 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version