உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான சகல பணிகளும்
நிறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்
.சுபியான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(23.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளில் இருந்து பட்டியல்
வேட்பாளர்களுடன் சேர்த்து 274 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இறுதி தேர்தல் முடிவு
வியாழக்கிழமை(24.04.2025) தொடக்கம் அனைத்து அரசு அலுவலகங்கள் பொலிஸ் நிலையங்கள்
தபால்மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளத்துடன் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட அரச
ஊழியர்கள் தேர்தல் கடமைகளுக்காக அமர்த்தப்பட உள்ளனர்.
மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்ற வாக்குகள் 144
வட்டார தேர்தல் வாக்கு என்னும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு என்னும் பணிகள்
முன்னெடுக்கப்பட உள்ளன.
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகளுடன் இணைந்ததாக இறுதி தேர்தல் முடிவு வட்டார
தேர்தல் எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
