Home இலங்கை அரசியல் பிரதமர் பதவியை ஏற்க மறுத்த சஜித்: கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளும் தரப்பு

பிரதமர் பதவியை ஏற்க மறுத்த சஜித்: கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆளும் தரப்பு

0

பிரதமர் பதவியை ஏற்காத சஜித் பிரேமதாச ஒருபோதும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விசனம் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று (12.08.2024) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

பிரதமர் பதவி

75 எம்.பிக்களால் ஒன்றினைந்து வழங்கப்பட்ட பிரதமர் பதவியை ஏற்காத தலைவரே சஜித் பிரேமதாச.

அண்மைய நாட்களில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்த அணைவரும், ஏற்கனவே அவருடன் இருந்த எம்.பி.க்கள். இது புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 

சஜித் பிரேமதாச போன்ற அனுபவமற்ற நபரிடம் இலங்கையை ஒப்படைப்பது முட்டாள்தனமான செயல்.” எனவும் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/allegation-against-sajith-1723526590

NO COMMENTS

Exit mobile version