முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran), தனது சொந்த நலனுக்காக அனைத்து அரசியல்வாதிகளிடையேயும் டீல் போட்டுகொண்டு இருப்பதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தாண்டி தனக்கு என்ன வேண்டும் மற்றும் தனக்கு என்ன பதவி வேண்டும் என்பதில் மாத்திரமே சுமந்திரனுக்கு அக்கறை.
அரசியல்வாதிகளிடம் டீல்
அத்தோடு, சிங்கள மக்களுக்கு சுமந்திரனிடம் பேசுவது என்பது நம்பிக்கைக்குரியது.
ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரிடம் கலந்துரையாடுவதை விட சிங்கள மக்களுக்கு இவரிடம் கலந்துரையாடுவது இலகுவாக இருக்கும் நிலையில்தான் இவர் உள்ளார்.
இந்தநிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கட்டாயம் சுமந்திரனை நிராகரிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
காரணம், சுமந்திரன் முழுக்க முழுக்க தமிழ் தேசிய நீக்கத்தை செய்தவர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசியல் ஆளுமை, சுமந்திரனின் அரசியல் நகர்வு, தமிழ் மக்களின் அதிகாரம் மற்றும் தமிழரசுக்கட்சி தொடர்பில் அவர் தெரிவித்த அனல் பறக்கும் கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/S-mOFRIskok?start=1601