Home இலங்கை அரசியல் ஜனாதிபதி மீது தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி மீது தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு – செய்திகளின் தொகுப்பு

0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil
Wickramasinghe) நற்பெயரை உயர்த்துவதற்காக அரச நிதிகள், வாகனங்கள் மற்றும்
வளங்கள் பயன்படுத்தப்படுவதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று
அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி செய்தியாளர் மாநாட்டில்
இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களுக்காக அரச நிதியை
தவறாகப் பயன்படுத்துவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், அத்தகைய
நடைமுறைகளுக்கு எதிராகவே காலிமுகத்திடல் போராட்டம் உருவானது என்றும் அவர்
கூறியுள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version