தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம், மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிவிட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகச தெரிவித்துள்ளார்.
மக்களின் கனவுகளை சிதைத்த அரசாங்கம், இரவும் பகலும் தங்களைக் நினைத்து கனவு காண்கிறது என்றும், இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் நாமல் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மக்களின் கனவு
” மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முற்றிலுமாக மீறி, அதனை சிதைத்துள்ளது.
ஆனால், நேர்மையான தரப்பும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை காவல் துறையிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக தங்கள் கடமையைச் செய்யுமாறு நேர்மையான அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையென்றால், உலுகேதென்னவுக்கு பிணை கிடைத்தது போல, பாதுகாப்பு அதிகாரிகள் மீது காவல்துறையின் தவறான நடத்தை, சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும். எனவே, இவற்றை தவிர்த்து பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்துங்கள்” என கூறியுள்ளார்.
