Home இலங்கை சமூகம் வவுனியாவில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் : வெளியான தகவல்

வவுனியாவில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் : வெளியான தகவல்

0

வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான
கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலானது கடந்த வருடம் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்
போது தேர்தல் கடமைகளில் பல அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடமைக்கான கொடுப்பனவுகள் 

குறித்த உத்தியோகத்தர்களுக்கான தேர்தல் கடமைக்கான கொடுப்பனவுகள் பல
மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ள போதும் வன்னித் தேர்தல் தொகுதியில்
வழங்கப்படவில்லை என கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வன்னித் தேர்தல் தொகுதியில் தேர்தல் நடைவடிக்கைக்கு அரசாங்கத்தால்
ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக வவுனியா
மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தற்காலிகமாக பணி இடைநிறுத்தப்பட்டு
விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்காரணமாக தேர்தல் கடமையில்
ஈடுபட்டவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட
செயலகத்தில் இருந்து அறிய முடிகிறது.

NO COMMENTS

Exit mobile version