யாழ்ப்பாணத்தில் (Jaffna), நேற்றையதினம் (11-01-2025) மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்களில்
ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான அல்போன்சோ சந்தியாப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இரண்டு கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்ற நிலையில், குறித்த கடற்றொழிலாளருக்கு இன்றையதினம் (12) சுகயீனம் ஏற்பட்டது.
ஊர்காவற்துறை வைத்தியசாலை
பின்னர் அவரை ஊர்காவற்துறை
வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffnaயில்) வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கச்சான் பருப்பு புரையேறியதால் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் – பு.கஜிந்தன்