இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது.
இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என அந்த சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பிரசன்ன களுஆரச்சி (K.S. Prasanna Kalu Arachchi) தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள்
இது தொடர்பான மேலதிக தகவல்களை 011-2886 088 அல்லது 076-095-4002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.