Home சினிமா அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் மிகப்பெரிய சம்பளம்.. இத்தனை கோடியா?

அட்லீ படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் மிகப்பெரிய சம்பளம்.. இத்தனை கோடியா?

0

இயக்குனர் அட்லீ ஹிந்தியில் ஜவான் படத்திற்கு பிறகு சல்மான் கான் உடன் கூட்டணி சேர இருந்தார். அந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போக அவர் தற்போது அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

அந்த படத்திற்காக அட்லீ தற்போது முதற்கட்ட பணிகளை செய்து வருகிறாராம். சன் பிக்சர்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? தயாரிப்பாளர் கூறிய முக்கிய அப்டேட்

அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட சம்பளம்

இந்த படத்திக்காக அல்லு அர்ஜுன் 175 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். அது மட்டுமின்றி படத்தின் லாபத்தில் இருந்து 15% பங்கும் அவர் பெற ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம்.

அதனால் மொத்தம் ஒரு மிகப்பெரிய தொகை அல்லு அர்ஜுனுக்கு இந்த படம் மூலமாக சம்பளமாக கிடைக்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் அல்லு அர்ஜுன் மாற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

NO COMMENTS

Exit mobile version