2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது சேவை உறுதிமொழியை திருத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, சுத்தமான இலங்கை'(‘Clean Srilanka’) திட்டத்தின் ஆரம்பத்துடன், இந்த திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உறுதிமொழியில் திருத்தம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த திட்டம் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தவும், அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறன்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.