Home இலங்கை பொருளாதாரம் நிதிச் சேவைகள் சட்டத்தை திருத்துவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பு

நிதிச் சேவைகள் சட்டத்தை திருத்துவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பு

0

நிதிச் சேவைகள் துறையை நிர்வகிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுஆய்வு செய்து வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என  அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டின் 42-ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைச் சட்டம் நடைமுறைக்கு வந்து சுமார் 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிதிச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிறுவன ஆளுகை

சட்டத்தின் உரிமம் வழங்குதல், மேற்பார்வை, தீர்வு காணுதல், நிறுவன ஆளுகை, வைப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத வைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு எதிரான நடைமுறையாக்கம் தொடர்பான பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதன்படி, 2011-ஆம் ஆண்டின் 42-ஆம் இலக்க நிதிச் சேவைகள் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற தகுதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/amending-the-financial-services-act-1777973464

NO COMMENTS

Exit mobile version