Home இலங்கை அரசியல் பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்: அநுர தரப்பு வெளிப்படை

பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்: அநுர தரப்பு வெளிப்படை

0

பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளதாக மத புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்  ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை மதத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத போதனைகள்

மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொளப்படும்.

பௌத்த மத தலைவர்களின் போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல பௌத்த பிக்குகள் அஸ்கிரி மற்றும் மல்வத்த பீடங்களின் தலைமை பீடாதிபதிகளிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.

அந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது.

அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவதற்காக பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளது” என்றார்.

NO COMMENTS

Exit mobile version