Home இலங்கை அரசியல் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க சிறப்பு விமானி யார்: இந்தியாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க சிறப்பு விமானி யார்: இந்தியாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கமைய, முற்றுமுழுதாக இலங்கை அமெரிக்காவின் தளமாக மாறி வருவதாக அரசியல் மட்டங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது கடந்த காலங்களில் ரணிலின் ஆட்சியின் போது சோபா உடன்படிக்கையில் அமெரிக்காவினால் முன்னெடுக்க முடியாத திட்டங்களை தற்போதைய அநுர அரசாங்கத்தின் ஊடாக செயற்படுத்த அமெரிக்கா திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

தென்னிலங்கை சிங்கள மக்களை பொறுத்தமட்டில் இந்தியாவினை மாத்திரமே எதிரிகளாக பார்த்து வரும் நிவையில், அமெரிக்காவின் வருகை பிரச்சினையாக அமையாது என்றும் கருதப்படுகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு பீச் கிங் (360 ER) ரக கண்காணிப்பு விமானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கை விமானப்படை தளபதி மற்றும் அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவன் கொளர் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க சிறப்பு விமானியினால் இந்தியாவிற்கு பெரும் நெருக்கடி காத்திருப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல தகவல்களையும் அவை ஏற்படுத்தப்போகும் விளைவுகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version