Home அமெரிக்கா அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

0

புதிய இணைப்பு

அமெரிக்க – வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) உலங்கு வானூர்தி மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெனியிட்டுள்ளன.

குறித்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்துள்ளதுடன் இராணுவ உலங்கு வானூர்தியில் 3 வீரர்கள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் பயணிகள் விமானம் போடோமாக் நதிக்குள் (Potomac River) விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவசரகால மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தை தொடர்ந்து வொஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் உலங்கு வானூர்தியும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 சிறிய ரக பயணிகள் விமானம் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற உலங்கு வானூர்தியுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானங்கள் நிறுத்தி வைப்பு 

விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இந்த விமான விபத்தையடுத்து ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகள் துறை தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version