Home அமெரிக்கா கடலில் வீழ்ந்து நொருங்கிய விமானம் : 12 பேர் பலி

கடலில் வீழ்ந்து நொருங்கிய விமானம் : 12 பேர் பலி

0

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் (Honduras) நடந்த விமான விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மீட்பு பணி

ஹோண்டுராஸ் நாட்டில் ரோவாடன் தீவில் இருந்து லான்சா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் நேற்று முன்தினம் (17) புறப்பட்டபோது திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்துள்ளது.

இதனை பார்த்த கடற்றொழிலாளர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் முழு உயரத்திற்கு செல்ல முடியாமல், விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version