Home அமெரிக்கா இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் மீதான கொடூர தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இஸ்ரேலின் கோலான் ஹைட்ஸ் மீதான கொடூர தாக்குதல்: அமெரிக்கா வெளியிட்ட தகவல்

0

இஸ்ரேலுக்கு (Israel) சொந்தமான கோலான் ஹைட்ஸ் (Golan Heights) மீதான வான்வழித் தாக்குதல் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

இறுதிச் சடங்குகள்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரே காரணம் எனக் கூறினாலும் குறித்த அமைப்பின் பேச்சாளர் மொஹமட் அஃபிப் (Mohamad Afif) இதனை மறுத்திருந்தார்.

அத்துடன், ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதற்கு தகுந்த விலையை கொடுக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Nethanyahu) கூறியிருந்தார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலில் பலியான இளைஞர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேல் – காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version