Home இலங்கை அரசியல் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளருடன் ரணில் கலந்துரையாடல்

வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளருடன் ரணில் கலந்துரையாடல்

0

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் நேற்று(27) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கையில் அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கேள்வியெழுப்பியுள்ள விமல் வீரவன்ச

அமெரிக்க விவசாயத் திணைக்களம்

அந்த திட்டத்தின் ஊடாக இலங்கை முழுவதும் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ரி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version