Home முக்கியச் செய்திகள் இலங்கை விரையும் அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரி

இலங்கை விரையும் அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரி

0

அமெரிக்க(us) இராணுவ அதிகாரி ஒருவர் நாளை மறுதினம் (ஒக்டோபர் 10) இலங்கைக்கு(sri lanka)விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

இன்று (ஒக்.8) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவ அதிகாரி

அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் நாளை மறுதினம் ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். நாங்கள் கடற்படைக்கு தேவையான உபகரணங்களை அமெரிக்காவிலிருந்து பெறுகிறோம் என அவர் தெரிவித்தார்.

விமானம் கையளிப்பு

இதேவேளை அமெரிக்கா சிறிலங்கா கடற்படையின் கடல் கண்காணிப்பிற்காக புத்தம் புதிய விமானத்தை அன்பளிப்பாக வழங்கவுள்ளது.

இந்த விமானத்தை கையளிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று (08) சீனாவின்பாய்மர போர்க்கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளமை தெரிந்ததே. 

https://www.youtube.com/embed/24K29a5VH_I

NO COMMENTS

Exit mobile version