Home அமெரிக்கா நடுவானில் பயணிகளுடன் காணாமல்போன அமெரிக்க விமானம்

நடுவானில் பயணிகளுடன் காணாமல்போன அமெரிக்க விமானம்

0

அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு (Alaska) சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.

விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று (07) பிற்பகல் 2.37 மணிக்கு உனலக்லீட்டில் இருந்து புறப்பட்டு, கடைசியாக நார்டன் சவுண்ட் பகுதிக்கு மேல் பிற்பகல் 3.16 மணிக்கு தரவை அனுப்பியதாக விமானப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. 

முன்னதாக, வொஷிங்டன், டிசியில் ஒரு இராணுவ விமானமும் ஒரு ஜெட் விமானமும் நடுவானில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version