Home அமெரிக்கா ட்ரம்ப் மற்றும் ஹரிஸின் இறுதி நகர்வு! சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகின

ட்ரம்ப் மற்றும் ஹரிஸின் இறுதி நகர்வு! சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகின

0

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோர் தங்களின் இறுதிப் பேரணிகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

முக்கியமாக தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் 7 மாநிலங்களில் இந்த பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றையதினம் (19.10.2024) மிச்சிகன் மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் ஹரிஸ் தனது பேரணிகளை நடத்தவுள்ள அதேவேளை, வடக்கு கரோலினா மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் ட்ரம்ப் தனது பேரணிகளை நடத்தவுள்ளார்.

கருத்துக் கணிப்புக்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்காவின் 50இல் 26 மாநிலங்களில் ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ட்ரம்ப்பை விட ஹரிஸ் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

எனினும், முக்கிய மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version