Home அமெரிக்கா அமெரிக்க பால்டிமோர் கப்பல் விபத்து : இலங்கை-இந்திய பணியாளர்களை வெளியேறாமல் தடுக்கும் சட்டத்தரணிகள்

அமெரிக்க பால்டிமோர் கப்பல் விபத்து : இலங்கை-இந்திய பணியாளர்களை வெளியேறாமல் தடுக்கும் சட்டத்தரணிகள்

0

Courtesy: Sivaa Mayuri

அமெரிக்காவின் (America) பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்கொட் கீ பாலத்தின் மீது கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று மோதி விபத்துக்குள்ளான டாலி(Dali) என்ற சரக்குக் கப்பலில் பணியாற்றும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் நாடு திரும்புவது மேலும் தாமதமாகியுள்ளது.

அவர்கள், தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க அங்குள்ள சட்டத்தரணிகள் முயற்சித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு குழு உறுப்பினர்கள்

இந்த வாரம் நீதிமன்ற உத்தரவுகளின்படி, குழு உறுப்பினர்களில் எட்டு பேர் ஜூன் 20 ஆம் திகதிக்குள் நாடு திரும்பியிருக்கவேண்டும்.

எனினும் அவர்களை தொடர்ந்தும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்க செய்வதன் மூலம்,பாலம் இடிந்து விழுந்ததால் ஏற்படும் செலவுகள் மற்றும் சேதங்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பமுடியும் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டால், உரிமைகோருபவர்கள் அவர்களை கேள்வி கேட்க  ஒருபோதும் வாய்ப்பில்லை என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக அமெரிக்காவின் நீதித்துறை புலனாய்வாளர்கள் ஏற்கனவே வீடு திரும்ப திட்டமிடப்பட்டுள்ள எட்டு குழு உறுப்பினர்களை விசாரணை செய்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அமெரிக்காவின் நீதித்துறை புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version