Home முக்கியச் செய்திகள் வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

வீடொன்றில் சடலமாக கிடந்த அமெரிக்க பெண்! தொடரும் விசாரணை

0

சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த அமெரிக்க பெண்ணொருவர் கண்டி – அருப்பொலவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55) என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

உயரிழப்பதற்கு முந்தைய நாள் அவர் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த பெண் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கண்டி சுற்றுலா காவல்துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

NO COMMENTS

Exit mobile version