அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று அறுவருக்கு மரணதண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துள்ளது.
இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்
கொலைச் சம்பவம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
மேற்படி 6 பேரும், 2015 ஆம் ஆண்டில் இரண்டு நபர்களைத் தாக்கி, பின்னர் அவர்களை
வாகனம் ஒன்றினால் மோதி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அம்பாறை மேல் நீதிமன்றம், மேற்படி 6 நபர்களும் கொலைக்
குற்றவாளிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளனர் என்று
கூறி இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
