பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அது போல அந்த நிகழ்ச்சியை எதிர்த்தும் பலர் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். கலாச்சார சீரழிவு என பிக் பாஸ் நிகழ்ச்சி மீது அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி நேற்று சென்னையில் பிக் பாஸ் வீட்டின் அருகில் போராட்டம் நடத்தி இருக்கிறது.
பிக் பாஸ் ஷோவை தடை செய்ய வேண்டும் என கேட்டு அவர்கள் விஜய் சேதுபதியின் போட்டோவை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
