Home இலங்கை சமூகம் ஆலையடிவேம்பில் ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

ஆலையடிவேம்பில் ஆசிரியர் தாக்கப்பட்ட விவகாரம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

0

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின்
வீட்டுக்கு சென்ற அதிபர் ஆசிரியர் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு
கோபுரத்துக்கு முன்னால் ஆசிரியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் 

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு
வித்தியாலய அதிபர் ஆசிரியர் இருவரும் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்விகற்கும்
மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை தம்பட்டை பிரதேசத்தில் இடம்பெற இருந்த
செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்கு கடந்த
வெள்ளிக்கிழமை (23) சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர்
அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களது இரு மோட்டார்
சைக்கிள்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்த இருவரும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரை
பொலிஸார் கைது செய்தனர்.

தாக்குதல் சம்பவத்தை கண்டித்து 

இதையடுத்து குறித்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை
கண்டித்து இன்று (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள
பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9.00
மணிக்கு ஒன்று திரண்டனர்.

இதன் போது யார் தருவர் ஆசிரியர்களுக்கு உத்தரவாதம், ஆசிரியர் மீது அன்பு
காட்டு. வஞ்சனை தவிர்த்து வழி காட்டியை மதிக்கலாம் போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள்
ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக
சென்றனர்

இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமது
கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version