Home இலங்கை சமூகம் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

0

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசூரிய  நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டபிளாக பணியில் இணைந்தவர்

இவருக்கான நியமனக் கடிதம்,  ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் பணியாற்றியிருந்தார். 

இவர் பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அதிகாரியாகும்.

மேலும், பிரியந்த வீரசூரிய பொலிஸ் திணைக்களத்தில் கான்ஸ்டபிளாக பணியில்  இணைந்து கொண்டார்.

அதன் பின்னர் படிப்படியான முன்னேற்றங்களை அடுத்து அவர் தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version