Home இலங்கை அரசியல் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

0

நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம் திகதி வரை நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஜனாதிபதி தேர்தல்

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க அறிவித்தார்.

மேலும், அவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version