நதுன் சிந்தக்க அல்லது ‘ஹரக்கட்டா’வை மனநலம் பாதிப்படைய செய்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில், இந்த அரசாங்கம் வந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார் என ஹரக் கட்டாவின் சட்டத்தரணி உதுல் பேமரத்தன தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தங்காலை பழைய சிறை
தங்காலை பழைய சிறைச்சாலையில் ஹரக் கட்டாவுக்கு எவ்வித தொடர்புசாதனங்களும் இல்லை.புத்தகம் வழங்க முடியும். ஆனால் எழுதுவதற்கு பேனை ஒன்றும் கொடுக்க முடியாது.
ஒரு முறை பேனை ஒன்றை கொடுத்து துப்பாக்கி கொடுத்தது போல் பிரச்சினைப்படுத்தினர்.யாருடனும் கதைக்கவும் பார்க்கவும் முடியாது.தாய் தந்தை மட்டும் தான் பார்க்க முடியும்.சாப்பாடு கொடுக்க முடியாது.
24 மணிநேரமும் சீசீரிவியால் நோட்டமிடப்படுகிறது.சட்டத்தணிகளை சந்திக்கும் போது கைவிலங்கிட்டே இருப்பார்.சட்டத்தரணிகள் கதைப்பதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார் கதைக்க மாட்டார்.
மனநிலை பாதிப்பு
இவ்வாறான செயற்பாடுகளில் அவரின் மனநிலையை பாதிப்படைய செய்து, தன் உயிரை மாய்த்து கொள்ளவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது.ஆனால் அரச மாற்றத்தில் கைவிடப்பட்டுள்ளது.
‘நான் சாப்பாடு வரும் வரை காத்திருப்பேன் சாப்பிடுவதற்கில்லை ஒரு வார்த்தை கதைக்க’ என்று சொன்னார்.அவருக்கும் எதுவும் கதைக்க முடியாது.இவ்வாறு தனி மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
பணம் பறிப்பு
கடந்த காலங்களில் பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகை பணம் பொலிஸார் பெற்றுக் கொண்ட நடைமுறை ஒன்று இருந்தது.
அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்ல மாட்டோம் மற்றும் தடுத்து வைக்கும் ஆணை எடுக்க மாட்டடோம் என பெரும் தொகை பணம் பெற்றுக் கொள்வது.ஆனால் அதி கூடிய தடுத்து வைக்கும் ஆணையெடுக்கப்படுகிறது.
அவ்வாறு பெறப்பட்டே மாகந்துர மதுஸ் கொல்லப்பட்டார்.அவ்வாறே ஹரக் கட்டாவுக்கும் நடக்க விருந்தது.அரசாங்கமே ஒருவரை கைது செய்து உன்னை கொல்வோம் என பணம் பறிக்கின்றனர்.
மடகஸ்காரில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டனர் ஆனால் சிலரே கொண்டுவரப்பட்டனர்.இதில் பெயர் பெற்ற பாதாள உறுப்பினர்களின் பெயரை வைத்துக் கொண்டு அனைத்து போதை பொருள் கடத்தல் மற்றும் சூட்டு சம்பவங்களை அவர் தலையில் போட்டு விட்டு அனைத்தும் நடந்து கொண்டே இருந்தது.
சலுகைகள் நிறுத்தம்
‘நான் ஏதும் சொன்னால் எனக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்துகின்றனர்.பழுதடைந்த உணவை வழங்குகின்றனர்’என்று ஹரக் கட்டா என்னிடம் சொன்னார்.தன்னை ஒரு சுயாதீனமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள் அப்போது நான் சொல்லுகிறேன் என்கிறார்.
எங்களுக்கு ஒன்றும் கூற முடியாது.தங்காலை பழைய சிறையில் உள்ள அதிகாரிகள் எடுப்பதே தீர்மானமாகும்.இவருக்கு எதிராக 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடுக்கப்பட்டுள்ள 12 வழக்குகளுக்கே அவரை தங்காலையில் இருந்து கொழும்பு கொண்டு வரும் வேலையே நடக்கிறது.
எங்களுக்கு அனைத்துக்கும் பேச முடியாது என்றார்.
