Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொள்கை ஆலோசகர் நியமனம்

எதிர்க்கட்சித் தலைவருக்கு கொள்கை ஆலோசகர் நியமனம்

0

  எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கை ஆலோசகராக பொருளாதார நிபுணர் தலால் ரபி(Talal Rafi) நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு புதிய பதவிக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்(sajith peremadasa) நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தலால் ரபி, சர்வதேச நாணய நிதியத்தின் பொது நிதி குறித்த நிபுணர் மன்றத்தில் சட்ட உறுப்பினராகவும், உலகப் பொருளாதார மன்றத்தின் நிபுணர் வலையமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

 பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர்

பலதரப்பு அபிவிருத்தி வங்கியின்(multilateral development bank) பொருளாதார நிபுணரும் பொருளாதார கொள்கை ஆலோசகருமான தலால் ரபி, டெலாய்ட் குளோபல் எகனமிஸ்ட் வலையமைப்பின்(Deloitte Global Economist network) உறுப்பினராகவும், இலங்கை மத்திய வங்கியின்(Central Bank of Sri Lanka) வங்கியியல் ஆய்வு மையத்தில் வெளி விரிவுரையாளராகவும் உள்ளார்.

அவர் உலக வங்கி(World Bank), ஆசிய அபிவிருத்தி வங்கி(Asian Development Bank) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி பார் இன்டர்நஷனல் டெவலப்மென்ட் (USAID) திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.இது தொடர்பில் போர்ப்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version