Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பல நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழப்பு

கிளிநொச்சியில் பல நாட்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழப்பு

0

கிளிநொச்சி (Kilinochchi) – இரணைமடுக்குளத்தின் கரைப்பகுதியில் 15 நாட்களாக காயத்துடன்
காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது.

குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு
தெரிவித்திருந்ததாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் வருகை தந்தபோதும் காயப்பட்ட யானைக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பு

இந்தநிலையில், தற்பொழுது
இறந்த யானையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இறந்த யானையின் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version